ஐயா கட்டுப்படி ஆகலே விட்டுடுங்க! கதறும் உடன்பிறப்புகள்!

0
98

முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் நடப்பதற்கு முன்னரே திமுகவின் நிர்வாகிகளுக்கு பல வசனங்களை கொடுத்து வந்தார். நோய் தொற்று காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு நேரத்தில் மாவட்ட செயலாளர்கள் அவரவர் மாவட்டத்தில் அவதிப்பட கூடிய மக்களுக்கு உதவி புரிய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார் ஸ்டாலின்.

இதனால் திமுகவின் பல மாவட்ட செயலாளர்கள் அவரவர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் ஏராளமான உதவிகளை செய்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் சலிப்புக்கு வர வேண்டிய நேரமும் வந்தது. அவர்கள் பொது மக்களுக்கு உதவிகள் புரிய வேண்டுமென்று தலைமை உத்தரவு போட்டிருந்தாலும் அது குறித்து தலைமையிலிருந்து எந்தவிதமான நிதியும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்படவில்லை. இதனால் தங்களுடைய சொந்த பணத்தை வைத்து அனைவரும் பொதுமக்களுக்கு உதவி புரிந்து கொண்டார்கள்.

அதோடு பலர் எங்களால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது எங்களை விட்டுவிடுங்கள் என்று காலில் விழாத குறையாக கதற தொடங்கினார்கள்.

இந்த சூழ்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து முதன்முறையாக சந்திக்க இருக்கும் இந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், திமுகவின் வேட்பாளர்கள் அந்த கட்சி விஐபிகளுக்கு செலவு செய்ய இயலாமல் திணறி வருவதாக சொல்லப்படுகிறது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருகின்ற சூழ்நிலையில், பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இதற்காக முக்கிய பிரமுகர்கள் கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் வருகை தரும்போது பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யுமாறு முக்கிய நிர்வாகிகள் நிர்ப்பந்தம் செய்வதாக தகவல்கள் வெளியாகின்றன.

இதுகுறித்து உரையாற்றி இருக்கக்கூடிய அந்த கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பெங்களூரு ரோஜா பூங்கா பிரம்மாண்டமான பெரிய சைஸ் மாலை ஒன்றின் விலை பத்தாயிரம், நடுத்தர மற்றும் சிறிய அளவில் இருக்கக்கூடிய மாலைகள் குறைந்தது 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையில் இருக்கிறது, ஒரு வார்டில் 10 இடங்களில் பிரச்சாரம் செய்வதற்கு தலைவர்கள் வருகை தந்தால் 3 இடங்களில் இதுபோன்ற மாலைகள் போடப்படுகின்றது என கூறியிருக்கிறார்கள்.

கடைசியாக பிரச்சாரம் நடப்பதால் தற்போது ஆரத்தி எடுக்கப்படுகின்றது ஒரு ஆரத்தி எடுத்தால் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும், வசதிபடைத்த வேட்பாளர்கள் கூட மாலைக்கும், ஆரத்தி தட்டுக்கும் ஏற்படும் செலவுகளைப் பார்த்து திணறிப் போய் இருக்கிறார்கள், ஆனால் சாதாரண வேட்பாளர்கள் கடன்வாங்கி மாலை போட்டு வருகிறார்கள். கட்டுப்படி ஆகவில்லை என்று புலம்பி வருகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.