அக்குளில் ஏற்படும் வியர்வை துர்நாற்றம்!!! இதை சரிசெய்ய சில இயற்கையான டிப்ஸ் இதோ!!!
நமது அக்குளில் சுரக்கும் வியர்வையானது துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இந்த துர்நாற்றத்தை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாம் அதிகமாக வெளியே சென்று வரும்பொழுது நமது அக்குளில் வியர்வை சுரக்கும். இந்த வியர்வை நமது அக்குள்களில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இந்த துர்நாற்றத்தை மறைக்க நாம் வாசனை திரவியங்கள் பயன்படுத்துவோம். ஆனால் எல்லா நேரங்களிலும் இந்த வாசனை திரவியங்கள் பயன் தராது.
அக்குள்களில் ஏற்படும் இந்த வியர்வை துர்நாற்றத்தை போக்குவதற்கு இந்த பதிவில் சில அருமையான இயற்கை முறையிலான மருத்துவ முறைகளை பற்றி பார்க்கலாம்.
அக்குள் வியர்வை துர்நாற்றத்தை பறக்கும் டிப்ஸ்…
* அக்குளில் இருந்து வரும் வியர்வை ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவதற்கு தக்காளியுடன் எலுமிச்சை சாறு கலந்து அதை தண்ணீரில் தேய்த்து 15 நிமிடம் கலந்து கழுவ வேண்டும்.
* அக்குளில் இருந்து வெளிவரும் வியர்வை ஏற்படுத்தும் துர்நாற்றத்தை சரி செய்ய தேங்காய் எண்ணெயில் சிறிதளவு லாவெண்டர் எண்ணெயை கலந்து குளிக்கச் செல்வதற்கு 15நிமிடங்களுக்கு முன் அக்குள்களில் தேய்க்க வேண்டும். பின்னர் குளிக்கலாம்.
* வெறும் தேங்காய் எண்ணெயை கால்களில் தடவினால் வியர்வை மூலமாக ஏற்படும் துர்நாற்றம் சரியாகும்.
* கற்றாழை சாறு எடுத்து தண்ணீரில் தேய்த்தால் வியர்வை மூலம் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும்.
* ஆப்பிள் சீடர் வினகரை சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து அக்குளில் தடவினாலும் வியர்வை துர்நாற்றம் சரியாகும்
* அக்குளில் இருக்கும் முடியை மாதத்திற்கு இரண்டு முறை ஷேவிங் செய்து நீக்க வேண்டும்.
* அழுக்குத் துணிகளை அணியக்கூடாது.
* கண்ட சோப்புகளையும் வாங்கி பயன்படுத்தாமல் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு மருத்துவர் கூறும் சோப்பை வாங்கி பயன்படுத்த வேண்டும்.