Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

#image_title

வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

வேலூர் கோட்டை அகழியில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினரை வரழைத்து கோட்டை அகழியில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து அகழியில் வீசிச் சென்றார்களா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹிஜாப் விவகாரத்தினை தொடர்ந்து கோட்டை சுற்றியும், முகப்பு பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் கோட்டை அகழியில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மேலும் பதற்றம் அங்கு கூடியுள்ளது.சிசிடிவி பொருத்தும் பணியினை துரிதப்படுத்தி இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுத்து, கோட்டையை பாதுகாக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் நேற்று வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கோட்டைக்கு நேரடியாக சென்று சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version