Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசை பாராட்டிய மத்திய அரசு! எதற்கு தெரியுமா?

கொரோனா தடுப்பு பணி தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு மறுபடியும் பாராட்டு தெரிவித்து இருக்கிறது.

கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பு மருந்தை வினியோகம் செய்வதற்கு இந்திய நாடு தன்னை தயார் படுத்தி வரும் சூழ்நிலையில், சென்னையில் அதற்கு ஏற்ற ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் நேற்றைய தினம் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னையில் இருக்கின்ற அரசு மருத்துவமனை, அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கும் தடுப்பு மருந்து அதோடு ஒத்திகை மையங்கள் போன்றவற்றை மத்திய அமைச்சர் பார்வையிட்டு இருக்கிறார் .தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதோடு உயரதிகாரிகள், அப்போது அருகில் இருந்தார்கள்.

சென்னை அப்பல்லோ ஹாஸ்பிட்டலில் இருக்கின்ற தடுப்பு மருந்து மற்றும் மையத்தை மத்திய அமைச்சர் பார்வையிட்டு இருக்கின்றார். இதற்கு முன்னால் நம் நாட்டில் இருக்கின்ற நான்கு தேசிய மருந்து சேமிப்பு மையங்களில் ஒன்றாக பெரியமேட்டில் இருக்கின்ற பொது மருந்து சேமிப்பு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பார்வையிட்டு இருக்கிறார். கல்கத்தா, மும்பை, அதோடு கர்னல் போன்ற இடங்களிலும் இதுபோன்ற சேமிப்பு மையங்கள் இருக்கின்றன.

அதன்பிறகு பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய மத்திய அமைச்சர் ,கொரோனாவை சமாளிப்பதில் மருத்துவர்கள் ஒரு மிகப்பெரிய தைரியத்தை காட்டி இருக்கிறார்கள். இதற்கு முன்னால் குறைந்த அளவிலான பரிசோதனை மையங்கள் இருந்திருக்கின்றன. ஆனாலும் இப்பொழுது 2300 பரிசோதனை மையங்கள் இருக்கின்றன. தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் ,சுவாசக் கருவிகள் மற்றும் மாஸ்க் போன்றவற்றை நாம் இப்பொழுது ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த நோயை எதிர்கொள்வதற்கு பிரதமர் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, இந்த நோய் தற்பொழுது கட்டுக்குள்ளே வந்திருக்கிறது. இந்த நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

அதோடு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் நோய்த்தடுப்பு மருந்து வினியோகம் செய்யும் திட்டம் தொடர்பாக ஆலோசனை செய்தார்.

மருத்துவர்கள், மற்றும் ராணுவத்தினருக்கு இந்த தடுப்பு மருந்து கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும் விரைவிலேயே நம்மால் இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முடிந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. அவசரகால பயன்பாட்டின் உரிமையை இப்பொழுது கொடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.

மாநில அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக, உரையாற்றிய மத்திய அமைச்சர் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு எடுத்துவந்த நடவடிக்கைகளை மனதார பாராட்டுகின்றோம். நூறு சதவிகித ஆர்.பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்தி இவ்வளவு பெரிய சவாலான ஒரு நிலைமையை தமிழக அரசு சமாளித்து இருக்கின்றது. தொற்று பரவலை தமிழகம் கட்டுக்குள் வைத்து இருக்கின்றது என பாராட்டு தெரிவித்தார்.

சென்னைக்கு பக்கத்தில் இருக்கின்ற செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை பார்வையிட்டு அதன் பிறகு செய்தியாளர்களிடம் உரையாற்றிய மத்திய அமைச்சர், இந்தியாவில் நோய்த்தடுப்பு ,மருந்து விநியோகம் ஆரம்பிக்கும் சமயத்தில் நாம் இருக்கின்றோம். இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை நாம் வெற்றிகரமாக தயாரித்து இருக்கிறோம். அந்த மருந்துகள் அவசரகால பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் அளவிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மருந்து வினியோகம் விரைவில் ஆரம்பிக்கப்படும். இதற்கென மருத்துவ பணியாளர்களுக்கு தேவைப்படும் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கிறது, வழிகாட்டுதல்கள் போன்றவை பின்பற்றப்படுகின்றன. தடுப்பு மருந்து வினியோகம் செய்வதற்கு ஆரம்பிப்பதற்கான எல்லாவிதமான ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றன. தயாரிப்பு ஆய்வகத்தில் இருந்து மக்களுக்கு இந்த மருந்து வழங்கும் வரை எல்லாமே சென்ற 5 மாத காலங்களில் செய்யப்பட்டிருக்கிறது.

அனைத்தையுமே, நேரில் சென்று பார்வையிடுவது தன சிறந்தது என்ற காரணத்தால், தமிழ்நாட்டில் இருக்கின்ற தனியார், மற்றும் அரசு மருத்துவமனைகள், தடுப்பு மருந்தினை பொதுமக்களுக்கு தடையில்லாமல் வழங்க இருக்கும் சேமிப்பு நிலையங்கள் போன்ற வசதிகளை நான் நேரிலேயே பார்வையிட்டு இருக்கிறேன்.

Exit mobile version