Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மதுரையில் ரோடு ஷோ நடத்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…. எப்போது தெரியுமா?

#image_title

மதுரையில் ரோடு ஷோ நடத்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…. எப்போது தெரியுமா?

தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு சென்னையில் ரோடு ஷோ நடத்தினார். அதனை தொடர்ந்து இன்று காலை வேலூரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதை முடித்து விட்டு இப்போது கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்காக வாக்கு சேர்கரிப்பி ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகம் வந்து தேர்தல் பரப்புரையாற்ற உள்ளார். அதன்படி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அமித் ஷா தமிழகம் வந்து பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்ட உள்ளாராம்.

அதுமட்டுமல்ல மதுரையில் ரோடு ஷோவும் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. 12ஆம் தேதி மதியம் 3 மணிக்கு மதுரை வரும் அமித் ஷா அங்கிருந்து சிவகங்கை சென்று பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து வாகன பேரணி சென்று வாக்கு சேகரிக்க உள்ளாராம். பின் அங்கிருந்து மீண்டும் மதுரை வரும் அமித் ஷா மதுரை பாஜக வேட்பாளர் சீனிவாசனுக்கு ஆதரவாக ரோடு ஷோ மேற்கொள்கிறார்.

அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்யும் அமித் ஷா இரவு மதுரையில் தங்கி விட்டு மறுநாள் காலை திருவனந்தபுரம் சென்று பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாகன பேரணி பரப்புரையில் ஈடுபட்டு விட்டு அப்படியே திருச்சி, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Exit mobile version