Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று தமிழகத்திற்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! எதற்காக தெரியுமா?

பொதுவாக டெல்லி வட்டாரத்தைச் சார்ந்த முக்கிய புள்ளிகள் தமிழகத்திற்கு வருவது தேர்தல் சமயத்தில் மட்டும் தான். மற்ற நேரங்களில் தமிழகத்திற்கு பெரிய அளவில் டெல்லி வட்டாரம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இது காங்கிரஸ் மத்தியில் ஆட்சியிலிருந்த போதும் சரி, தற்போது பாஜக மத்தியில் ஆட்சியிலிருக்கும்போதும் சரி ,தொன்றுதொட்டு நடைபெற்று வரும் வழக்கமான செயல்தான்.
ஆனால் பாஜகவை பொருத்தவரையில் தமிழகத்தில் எப்படியாவது காலுன்றி விட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை அந்த கட்சி மேற்கொண்டு வருகிறது என்பது பலரும் அறிந்ததே.அதற்காக பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலமுறை தமிழகத்திற்கு வந்து சென்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு 7 .30 மணியளவில் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்திலிருந்து ஆவடியிலுள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை மையத்திற்கு சென்றடைகிறார்.

இரவு அங்கேயே தங்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளைய தினம் காலை 8.30 மணியளவில் ஆவடி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை மையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறார்.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மாலை 6 மணியளவில் அமித்ஷா சென்னை வருகிறார். அதன்பிறகு மாலை மீண்டும் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Exit mobile version