Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமரைக் கண்டு அஞ்சு நடுங்கும் திமுக! தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கிறது பியூஸ் கோயல் ஆவேசப்பேச்சு!

சென்னை மடிப்பாக்கத்தில் நடந்த மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட ஏழு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தொழில் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது தேசிய அமைச்சர் கோயில் தமிழக மக்கள் பிரதமர் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், நீங்கள் பிரதமரின் தூதர்களாக இருக்கிறீர்கள். 8 வருடங்கள் செய்த சேவையால் பிரதமர் இந்த நம்பிக்கையை மக்களிடம் பெற்றுள்ளார்.கரீப் கல்யாண் திட்டங்கள் உள்ளிட்டவை ஏழை, எளிய மக்களுக்கு உதவியிருக்கிறது பிரதமர் வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுத்து வருகிறார்.

முன்னேறிய வளர்ச்சியடைந்த நேர்மையான தமிழகமாக மாற வேண்டும் என்று பிரதமர் எதிர்பார்க்கிறார். ஊழலே இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்பார்ப்பு. ஊழலற்ற தமிழகம் உருவாக வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பும் கூட என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போதைய தமிழக அரசால் ஊழலற்ற ஆட்சியை வழங்க முடியாது. தமிழகத்தில் தந்தை, மகன், மருமகன் என்ற வழியில் குடும்ப அரசியல் நடைபெற்று வருகிறது. ஆகவே தான் தமிழகம் வளர்ச்சி அடைவதில் சிரமம் இருக்கிறது பிரதமரை கண்டு திமுகவினர் பயப்படுகிறார்கள். ராமரின் படத்தைக் கூட மத்திய அரசு திட்டங்களில் இடம்பெற வைக்க அஞ்சுகிறார்கள்.

தமிழக முதல்வர் மத்திய அரசால் கொண்டுவரப்படும் திட்டங்களில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்துகிறார் 24 மணி நேரமும் இந்திய மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி உழைத்து கொண்டு இருக்கிறார். நவராத்திரிக்கான 9 நாளில் ஒருவேளை உணவை கூட பிரதமர் அருந்தவில்லை. நீர் மட்டும்தான் அருந்தினார். மக்கள் சேவையை தொடர்ந்து ஆற்றினார். விழாக்களை நாம் கொண்டாடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரதமர் சேவையாற்ற பயன்படுத்துகிறார் பிரதமரின் பணிகள் அண்ணாமலையை பாஜகவில் இணைந்து செயலாற்ற ஈர்த்துள்ளது. உயரிய பதவியிலிருந்து விலகி மக்கள் சேவையாற்ற கிடைத்த மாபெரும் தலைவர் அண்ணாமலை நோய் தொற்று காலத்தில் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் மாதம் தோறும் வழங்கப்பட்டது.

நான்கு லட்சம் கோடி இதற்காக செலவிடப்பட்டுள்ளது திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களை முறையாக கேட்டு பெற்று தமிழகத்தில் அமல்படுத்தவில்லை என்று குற்றம் சுமத்தினார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

மத்திய அரசின் திட்டங்களால் தங்களுடைய ஆட்சிக்கு பாதிப்பு வந்து விடுமோ? என்று அஞ்சுகிறார்கள். ஆகவே தமிழக பாஜகவினர் அண்ணாமலை வழிகாட்டுதல்படி திட்டங்களை பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் மாநில அரசு செய்ய வேண்டிய பணியை அண்ணாமலை திறம்பட செய்து வருகிறார். மாநில அரசும், அரசு அதிகாரிகளும் செய்ய வேண்டிய பணியை பாஜகவினர் செய்து வருகிறார்கள். மத்திய அரசு தரமான அரிசியை வழங்குகிறது. ஆனால் தரமற்ற அரிசியை மாநில அரசு ரேஷன் கடைகளில் விநியோகம் செய்கிறது என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்.

தமிழக அமைச்சர்கள் தரம் குறைந்த வார்த்தையால் பிரதமரை விமர்சனம் செய்கிறார்கள். பிரதமர் அரசியல் கட்சி தலைவரல்ல. இந்திய நாட்டின் பிரதிநிதி. திமுக தலைவர்களை அண்ணாமலை ஒருபோதும் தரம் தாழ்ந்து பேசியதில்லை.

விரைவில் தமிழகத்தில் தாமரை மலரும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். சேறு, சகதியில் தாமரை மலரும் தாமரை மூலமாக வளர்ச்சி கிடைக்கும். தமிழகத்தில் குடும்ப அரசியலுக்கு மாற்றாக பாஜக ஆட்சி அமைய வேண்டும். தமிழகத்தில் 3 குடும்பம் மட்டுமல்ல அனைத்து குடும்பமும் வளர வேண்டும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version