அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்திற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் எதிர்ப்பு !!

0
99

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றம் செய்யப்படுவதற்கு பேராசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

கடந்த 16ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் , சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது .அதில் தற்பொழுது இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி கழகம் என்றும் புதிதாக உருவாக்கப்பட உள்ள கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்படும் என்றும் அந்த சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 42 வருடங்களாக சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால் மாணவர்களின் சான்றிதழ் மாற்றம் ஏற்படும் என்றும் வெளிநாடுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பாதிக்க நேரிடும் என்று பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

மேலும் ,தற்பொழுது இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், பெயர் மாற்றத்திற்கு எதிராக நாளை முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து அமைதிப் போராட்டம் நடத்த இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்காக பேராசிரியர்கள் நீதிமன்றத்தை நாடவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.