Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் சேதுபதியை காலால் எட்டி உதைத்த மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ.!!

நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் காலால் எட்டி உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் சேதுபதி தமிழில் விக்ரம், விடுதலை, மாநகரம் இந்தி ரீமேக்ஸஎன பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர இவரது நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இந்த நிலையில் இன்று பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர், காலால் எட்டி உதைத்துள்ளார். அவர் யார் என்று தெரியவில்லை.? தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Exit mobile version