Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நிச்சயமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்! ஹச்.ராஜா எச்சரிக்கை!

தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது ஓபிஎஸ் தலைமையில் கட்சி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி என்பதே அதிமுகவின் கொள்கையாக இருந்து வருகிறது .அவர்களுடைய தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் அதிமுகவுக்கு தான் இரட்டை இலை சின்னம் என்ற தேர்தல் ஆணையமே தெரிவித்திருக்கிறது. அதன் காரணமாக அதிமுகவின் பிரச்சினை என்பது முன்பே முடிவுக்கு வந்து விட்டது ஆனாலும் டிடிவி தினகரன் அதிமுகவை மீட்போம் என்று சொல்லும் போதெல்லாம் அவருடைய தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுக்க மட்டுமே செய்கின்றார். வேறு எந்த விதத்திலும் அவருடைய இந்த பேச்சு எடுபடாது என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் வசிக்கிறார்கள் அவர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுப்பதில் எந்த ஒரு சிரமமும் இருக்காது என நினைக்கின்றேன். இந்தியாவில் இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் ஆனாலும் காங்கிரஸ் கட்சியால் தலை தூக்க இயலாது புதுச்சேரி அரசு இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்று தெரியாது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும் சமயத்தில் அங்கே இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியாளர்கள், அவர்கள் செய்த ஊழல் சம்பந்தமாக அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை பாயும். ராகுல்காந்தி போகுமிடமெல்லாம் காங்கிரஸ் கட்சியில் இருப்பார்கள் அந்த கட்சியை விட்டு ஓடியே போய்விடுகிறார்கள் காங்கிரஸ் தேவை இல்லாத ஒரு சுமைதான் என்று அந்தக் கட்சியின் கூட்டணி கட்சியான திமுகவே நினைக்கின்றது.என தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version