Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரச்சாரம் ஓய்ந்தது! நாளை 4ம் கட்ட தேர்தல்! ஏற்பாடுகள் தீவிரம் எங்கு தெரியுமா?

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10ஆம் தேதி 58 தொகுதிகளுக்கும் இரண்டாவது கட்டமாக கடந்த 14ஆம் தேதி 55 தொகுதிகளுக்கும், வாக்குப்பதிவு நடைபெற்றது 2 கட்ட தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக 61.20 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக சொல்லப்படுகிறது. 3வது கட்டமாக 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், 59 தொகுதிகளுக்கான 4வது கட்ட தேர்தல் நாளையதினம் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் 624 வேட்பாளர்கள் களம் காணவிருக்கிறார்கள்.

லக்னோ, ரேபரேலி, லக்கிம்பூர், போன்ற பகுதிகளில் நடைபெறும் இந்த 4வது கட்ட தேர்தலுக்கான சூறாவளி பிரச்சாரம் நேற்று மாலை நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version