Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வருங்கால முதல்வரே! பாஜக சார்பாக வைக்கப்பட்ட பரபரப்பு பதாகை!

தமிழ்நாட்டில் வடதமிழ்நாடு தென்தமிழ்நாடு மற்றும் கொங்குநாடு போன்ற மாநிலக் கோரிக்கைகள் பல வருட காலமாக இருந்து வருகிறது இப்படியான சூழ்நிலையில், தற்சமயம் தமிழ்நாட்டில் கோவை, உதகை போன்ற மேற்கு மண்டல மாவட்டங்களை ஒன்றிணைத்து கொங்கு நாடு என்று புதிய மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆனால் கொங்குநாடு விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இருந்து மிக அதிக குரல்கள் எழுந்து வருகிறது0 ஏனென்றால் கோவை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பாரதிய ஜனதா கட்சி தனி செல்வாக்குடன் திகழ்ந்த வருவதாக சொல்லப்படுகிறது. இதனை எதிர்க்கும் விதத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பொதுமக்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டை பிரிக்க வேண்டாம் என்று திராவிடர் முன்னேற்றக் கழகம் தெரிவித்து வருகின்றது. அதோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியின் தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நாமக்கல் பகுதியில் வைக்கப்பட்ட வரவேற்பு பேனரில் கொங்கு நாட்டின் வருங்கால முதலமைச்சரே என்று தொண்டர்கள் அழைத்திருப்பது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரதிய ஜனதாவின் மாநில தலைவராக பொறுப்பேற்க இருக்கும் அண்ணாமலை நேற்று நாமக்கல் மாவட்டத்தில் இருக்கின்ற கட்சியின் தொண்டர்களை சந்திக்க அந்த பகுதிக்கு வருகை தந்திருக்கிறார். அண்ணாமலை அவர்களை வரவேற்கும் விதத்தில் பல இடங்களில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த பதாகைகளில் நாமக்கல் மணிக்கூண்டு என்ற இடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நகர கிளை சார்பாக வைக்கப்பட்டிருக்கின்ற பதாகையில் கொங்கு நாட்டின் வருங்கால முதல்வரே அண்ணாமலை என்ற வாசகம் இருந்தது. இதன் காரணமாக, மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இந்த பதாகை பலரின் கவனத்தையும் ஈர்த்தது என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கொங்கு நாடு மாநிலம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மேலும் பரபரப்பை உண்டாக்கி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version