Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி ஆப்பு! நிமிடத்தில் SMS மற்றும் காவல்துறைக்கு அலர்ட்

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி ஆப்பு! நிமிடத்தில் SMS மற்றும் காவல்துறைக்கு அலர்ட்

 

பெண்களை மதிக்கும் நமது நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும் நடந்து வருகின்றது.பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.இதனால் அரசு செய்வதறியாது திகைத்து வருகிறது.

 

குறிப்பாக குற்றங்கள் நடைபெற்ற பின்னர் அதற்கு தண்டனை வழங்குவதை விட குற்றம் நடப்பதற்கு முன்பே தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பாக இதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக இதற்காக ஆபாச இணையதளங்களை இந்திய அரசு தடை செய்து அறிவித்துள்ளது. இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.

 

இந்நிலையில் தான் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில காவல்துறை இதற்காக அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது.இதற்காக அவர்கள் புதிய திட்டத்தையும் செயல்படுத்த உள்ளனர்.

 

இந்த திட்டத்தின் படி ஒருவர் இணையத்தில் ஆபாசம் சார்ந்த தகவல்களை தேடினால், அந்த நபர் குறித்த விவரங்கள் உடனடியாக காவல்துறைக்கு நேரடியாகவே சென்று விடும். இந்த வசதியானது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்க காரணமாக உள்ள பிரச்சனையின் ஆணி வேரையே சரி செய்வதற்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

 

இவ்வாறு காவல்துறைக்கு பயனாளர் குறித்த தகவல் கிடைத்தவுடன் 1090 என்ற எண்ணில் இருந்து சம்பந்தபட்ட நபருக்கு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு எஸ்எம்எஸ் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு ஆப்பு அடிக்கும் விதமாக எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் உத்திரப்பிரதேச அரசும் காவல் துறையும் இணைந்து எடுத்துள்ள இந்த வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மற்ற மாநிலங்களிலும் இந்த திட்டமானது அமலாக வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

Exit mobile version