Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வரப்போகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாகம் 2! சிவகார்த்திகேயனுக்கு பதில் வேறொரு ஹீரோ! 

Upcoming Unrepentant Youth Association Part 2! Sivakarthikeyan's answer is another hero!

Upcoming Unrepentant Youth Association Part 2! Sivakarthikeyan's answer is another hero!

வரப்போகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாகம் 2! சிவகார்த்திகேயனுக்கு பதில் வேறொரு ஹீரோ!

சிவகார்த்திகேயன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக  பணியாற்றி வந்தார். தொகுப்பாளராக இருந்த பொழுதே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.அதனையடுத்து இவரது வெற்றிப் படியாக  3 என்ற படத்தில் தனுஷுடன் நட்பு கதாபாத்திரத்தில் நடித்தார். அதனையடுத்து மெரினா ,மனம் கொத்தி பறவை போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்த படங்கள் அனைத்தும் ஓரளவு வெற்றியை அடைந்தது.இருப்பினும் இவரது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் தான் இவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்தது. இப்படத்தை பொன்ராஜ் இயக்கினார்.பெருமளவு மக்கள் மனதில் இடம் பிடித்த படமும் அதுதான். அப்படத்தின் நகைச்சுவைகள் போன்றவை இன்றளவும் மக்கள் பேசி வருகின்றனர்.

இப்படமானது 2013ஆம் ஆண்டு திரையில் வெளிவந்தது. இதில் ஸ்ரீதேவி, சத்யராஜ் போன்றோர் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தனர்.சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியின்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாகம் 2 படம் வெளி வரக்கூடாது என்று தெரிவித்தார்.அந்தபடம் இரண்டாம் பாகம் எடுக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.இவர் கூறிய சில மாதங்களிலேயே வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாவது பாகம் எடுக்கப்போவதாக அரசல் புரசலாக பேசி வந்தனர்.அவ்வாறு பேசி வந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்க படத்தின் இயக்குனர் பொன்ராஜ் தனது வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியது, கண்டிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாகம் 2 எடுக்கப்படும். ஆனால் அதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க மாட்டார். சிவகார்த்திகேயன் சார் தற்பொழுது மெச்சூரிட்டி ஆகிவிட்டார். அதனால் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களுக்கு வாய்ப்பளிப்பதாக தெரிவித்தார். இவை அனைத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு பதில் வேறொரு நடிகர் நடிக்கயிருந்தாலும் அவருக்கு இணையாகுமா என்பது சந்தேகமானதே. பெரும்பாலான ரசிகர்கள் இரண்டாம் பாகம் எடுக்க நேரிட்டாலும் சிவகார்த்திகேயன் ஹீரோவாக இருக்க விரும்புகின்றனர்.

Exit mobile version