நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! பல்வேறு மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக தலைமை!

0
138

சில வருடங்களுக்கு முன்பு வரையில் பாஜக என்ற கட்சி இருக்கிறதா என்பதே தமிழக மக்களுக்கு சரியாக தெரியாது அந்த நிலையில்தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வந்தது.இன்னும் சொல்லப்போனால் அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கூட தமிழகத்தில் இருக்கின்றார்களா என்பதே தெரியாமல் இருந்தது.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ஆம் வருடம் முதன் முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அந்த கட்சியின் தலைமை தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தியது. அதாவது ஒரு வருடத்திற்குள் ஒரு லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று அந்த கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கு அசைன்மென்ட் கொடுத்தது அந்த கட்சியின் தேசிய தலைமை.

அதிலிருந்து மெல்ல, மெல்ல, தமிழகத்தில் பாஜக தலை தூக்க தொடங்கியது. அதேநேரம் பாஜக மதவாத சக்தி என்று ஒரு சிலர் தெரிவித்து வருவதும் உண்டு.

இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்காக சட்டசபை தொகுதி வாரியாக வெற்றி வாய்ப்பு இருக்கின்ற வார்டுகள், நம்பிக்கையான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக பாஜக தீவிரமாக இறங்கி இருக்கிறது.

இதுதொடர்பாக பாஜகவின் வட்டாரங்களில் விசாரித்தபோது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினரிடம் முதன்முதலாக பாஜகவிடம் மனுக்களை பெறும்படிஅறிவித்தது. பாஜகவின் வேட்பாளர்கள் கட்சியின் தாமரை சின்னத்தில் பொட்டியிடுவார்கள் அதிக இடங்களில் போட்டியிட்டால் தான் அனைத்து தரப்பு மக்களிடமும் தாமரைச் சின்னத்தை பிரபலப் படுத்த இயலும். இது எதிர்வரும் லோக்சபா தேர்தலுக்கு கைகொடுக்கும், அதிமுக கூட்டணி உறுதியாகி இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, சென்னையில் ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய 200 வார்டுகளில் ஒரு சட்டசபை தொகுதிக்கு இரண்டு வார்டுகள் என்று பாஜக 40 வார்டுகளில் போட்டியிட திட்டமிட்டிருக்கிறது. கோயமுத்தூர், மதுரை மாநகராட்சிகளில் 40% அதேபோல நாகர்கோவில் மாநகராட்சியில் 60 சதவீத இடங்களில் போட்டியிட இருக்கிறது. அதே போன்று பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சிகளில் அதிக இடங்களில் போட்டியிட இருக்கிறது. இதற்காக வெற்றி வாய்ப்பு இருக்கின்றவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அந்த வார்டுகளை அதிமுகவிடம் கேட்டு பெறுவதற்கான திட்டங்களையும் பாஜக வகுத்து வருகிறது ஒரு மாவட்டத்தில் பாஜகவின் தலைவர் மத்திய குழு நிர்வாகிகள் அணிகளின் பொறுப்பாளர்கள் என்று 200 முதல் 250 பேர் வரையில் இருக்கிறார்கள். அவர்களில் யார், யார், எத்தனை வருடங்கள் உறுப்பினராக இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கு, அரசியல் ஈடுபாடு உள்ளிட்ட விவரங்கள் அடிப்படையில் வேட்ப்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக பாஜகவின் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.