Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்துக! உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!

ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் இரண்டு கட்டமாக நடைபெற்றது இந்த சூழ்நிலையில், 15 நகராட்சிகளில் இருக்கின்ற 1064 வார்டுகளில் 121 நகராட்சிகளில் இருக்கின்ற 3468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் இருக்கின்ற 8888 வார்டுகளுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், நடத்த வேண்டும் என்று தெரிவித்து அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, ஊரக உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று தெரிவித்து அதிமுக சார்பாக மாநில தேர்தல் ஆணையத்தில் மனு வழங்கப்பட்டது. இந்த உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதன் விளைவாக எல்லா வாக்குச்சாவடி, வாக்குப் பெட்டியில் வைக்கப்படும் இடம், வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் போன்ற பல்வேறு உத்தரவுகளை இந்த நீதிமன்றம் பிறப்பித்து இருந்தது. அப்படி இருந்தும் கூட பல்வேறு அத்துமீறல்கள் நடைபெற்றது என குறிப்பிட்டிருக்கிறார்.

திமுகவினரை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டுமென தேர்தல் அதிகாரிகளை அமைச்சர்களும், சட்டசபை உறுப்பினர்களும், நிர்பந்தம் செய்ததாக குற்றம் சாட்டி இருக்கிறார். அதோடு இந்த விதிமீறல்கள் காரணமாக, மாநில தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது. இது குறித்து சென்ற அக்டோபர் மாதம் 20ஆம் தேதி ஆளுநரிடம் அதிமுக சார்பாக புகார் வழங்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவின் அடிப்படையில், எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஆகவே ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று தற்போதும் எந்தவிதமான விதிமுறைகளும் நடந்துவிடக்கூடாது என்று நினைத்து கடந்த மாதம் 1ஆம் தேதி அதிமுக சார்பாக மாநில தேர்தல் ஆணையத்தில் மனு வழங்கப்பட்டது. அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும், ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

அதோடு வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்கு துணை இராணுவத்தினரை நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தற்போதைய ஆளும் கட்சியான திமுக கடந்த 2006ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த சமயத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னையில் மிகப் பெரிய வன்முறை நடந்தது என குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகவே எங்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்ற அவர், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், நடத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருக்.கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Exit mobile version