2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு சம்மந்தமாக முதல்வர் தெரிவித்த கருத்திற்கு பதில் தெரிவிப்பதாக கூறி செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொள்ளைக்காரி எனவும் ஆத்தா எனவும் விமர்சனம் செய்தது ஸ்டாலினை கோபப்பட வைத்திருக்கின்றது என்று சொல்கிறார்கள்.
ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலாவிற்கு எதிரான மனநிலை மக்கள் இடையே ஏற்பட்டது இதற்கு காரணம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் அதனை அடுத்து ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இணைந்து விசாரணை ஆணவம் எல்லாம் அமைத்திருக்கிறார்கள் ஆனாலும் விசாரணை ஆணையம் செயல்படாமல் அப்படியே இருக்கின்றது அதேநேரம் ஜெயலலிதா மீதான மக்களின் அபிமானத்தை திமுகவிற்கு சாதகமாகும் வகையிலே ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகின்றார்.
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் இருந்த வரையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த இயலவில்லை என்று தெரிவித்தது முதல் ஜெயலலிதா இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா என்று இவரை ஸ்டாலின் பல இடங்களில் ஜெயலலிதாவை புகழ்ந்து பேச ஆரம்பித்திருக்கிறார் அதோடு மட்டும் இருந்துவிடாமல் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை திமுக ஆட்சிக்கு வந்தபின்பு கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படும் எனவும் ஸ்டாலின் பரிகாரம் செய்ய தொடங்கினார் அதிமுகவில் ஜெயலலிதா மீது அபிமானம் வைத்திருந்த பலரையும் கூட இந்த பிரசாரம் கவர்ந்தது.
அதோடு பாராளுமன்றத்தேர்தல் நேரத்திலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை என்று எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு எடுபட்டது இப்போதும்கூட வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் ஜெயலலிதாவை ஒப்பிட்டு பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகியோரை எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கருணாநிதிக்கு நிகரான தலைவராகவே ஜெயலலிதாவை ஸ்டாலின் உருவகப்படுத்த தொடங்கிவிட்டார் இந்த நிலையில்தான் கடந்த வாரம் ராசா செய்தியாளர்களிடம் பேசும்போது ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார்.
அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்று தெரிவிக்கும் எடப்பாடி ஊழல் ஆட்சிதான் நடத்துகின்றார் நாட்டை கொள்ளை அடித்த கொள்ளைக்காரி என்கின்ற விதமாக ராசா மிகக் கடுமையான வார்த்தைகளை வைத்திருக்கின்றார் அதோடு மட்டும் இல்லாமல் ஜெயலலிதாவை இவ்வாறு ராசா கொள்ளைக்காரி என தெரிவித்த நாள் ஜெயலலிதா அவருடைய நினைவு நாள் இதன்காரணமாக அதிமுகவினர் மட்டும் இல்லாமல் பொது மக்களும் கூட அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் அதோடு பெண்களும் மிக அதிக அளவில் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
இதன் மூலமாக ஜெயலலிதா விவகாரத்தில் திமுக போடும் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன ஜெயலலிதா மீது கரிசனம் இருப்பதைப்போல எதிர்கட்சித் தலைவர் பேசும் நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கொள்ளைக்காரி என்று விமர்சனம் செய்து இருக்கின்றார் என சமூக வலைதளங்களில் தீயாக பரப்பப்பட்டு வருகின்றது இந்த தகவல் ஸ்டாலினின் கவனத்திற்கு போன நிலையில் எடப்பாடியை பற்றி மட்டும் பேசாமல் அவர் எதற்காக ஜெயலலிதாவை இப்படி விமர்சனம் செய்தார் என ஸ்டாலின் கோவப்பட்டதாக தெரிவிக்கிறார்கள் அதோடு எடப்பாடி தான் நம்முடைய குறிக்கோள் ஜெயலலிதா கிடையாது என தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும் ஸ்டாலின் இவ்வாறு கோபமாக இருந்தாலும் கூட ராசா பேச்சால் திமுக மீது சில நடுநிலையாளர்களும் கூட அதில் இருப்பதாக தெரிகின்றது என தான் மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் மறைந்த ஒரு தலைவரை இவ்வாறு கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பது திராவிட அரசியல் கிடையாது ஆனால் திராவிட சூரியன் என்ற அடைமொழி போட்டுக்கொள்ளும் ராசா இவ்வாறு பேசலாமா என்று சொந்தக் கட்சிக்காரர்களே கூட தெரிவிக்கிறார்கள்.