Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறையிலிருந்து வந்த அவசர தகவல்.. அலர்ட்டான முதல்வர்!! நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Urgent information from the jail.. Alert Chief Minister!! Action order for administrators!!

Urgent information from the jail.. Alert Chief Minister!! Action order for administrators!!

 

DMK: உதயநிதி துணை முதலமைச்சர் எப்பொழுது என்று பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் மாஜி அமைச்சரிடமிருந்து முதல்வருக்கு முக்கிய தகவல் ஒன்று சென்றுள்ளது. அதாவது கடந்த மாதமே அமைச்சரவையில் மாற்றம் உண்டாகும், கட்டாயம் உதயநிதி துணை முதல்வர் பதவிக்கு ப்ரொமோட் ஆகிவிடுவார் என பலரும் கூறி வந்தனர். அதுமட்டுமின்றி மேடைப்பேச்சுகளில் இவரது நிர்வாகிகளும் துணை முதல்வர் உதயநிதி என்றெல்லாம் பேசி வந்தனர்.

இருப்பினும் முதல்வர் ஸ்டாலின், இந்த கோரிக்கை ஏதும் பழுக்கவில்லை என்று சூசகமாக பதிலளித்தார். முக்கிய காரணம் மூத்த நிர்வாகிகள் சம்மதம் அளிக்காதது தான். இதனை சுட்டிக்காட்டும் விதமாக சமீபத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  இளைஞர்கள் கட்சியில் கட்டாயம் தேவை உடனடியாக எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைக்க கூடாது என கூறினார். இவ்வாறு உட்கட்சிக்குள்ளேயே மூத்த மற்றும் இளம் நிர்வாகிகளிடையே மோதல் இருந்து வருகிறது.

இவ்வாறு இருக்கும் சூழலில் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து வெளியே வந்ததும் அவரது பதவி உள்ளிட்டவை அறிவிக்கும் பொழுது கட்டாயம் உதயநிதி க்கும் துணை முதல்வர் பதவியை ஒரே சமயத்தில் கொடுக்கப்படும் என திட்டமிருந்ததாக கூறுகின்றனர். ஆனால் சாட்சியங்கள் அளித்த வாக்குமூலத்தை பெற்றும் தற்பொழுது வரை செந்தில் பாலாஜி வழக்கானது சற்று தொய்வாக தான் காணப்படுகிறது.

நான் எப்பொழுது வந்து உதயநிதிக்கு பதவி கிடைப்பது உடனடியாக இந்த திட்டத்தை கைவிடும் படி ஸ்டாலினுக்கு மாஜி அமைச்சர் அறிவுருத்தியுள்ளாராம். உடனடியாக துணை முதல்வர் பதவியை உதயநிதிக்கு கொடுக்கும்படி தெரிவித்துள்ளாராம். அந்த வகையில் தான் தற்பொழுது அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கட்டாயம் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம். அதன்படி நாளை உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது உறுதி என அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Exit mobile version