URIC ACID: யூரிக் அமிலத்தை இயற்கையான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த புட்ஸ் ட்ரை பண்ணுங்க!

0
179
URIC ACID: Want to reduce uric acid naturally? Then try these boots!

URIC ACID: யூரிக் அமிலத்தை இயற்கையான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த புட்ஸ் ட்ரை பண்ணுங்க!

நமது இரத்தத்தில் காணப்படும் கழிவுப் பொருள் யூரிக் அமிலம்.இவை இரத்தத்தில் அதிகமாகும் பொழுது கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறும்.ஆனால் யூரிக் அமிலம் தொடர்ந்து அதிகமானால் மூட்டுகளுக்கு இடையில் படிந்து கீல்வாதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே இயற்கையான முறையில் உடலில் இருக்கின்ற யூரிக் அமிலத்தை கரைப்பது நல்லது.

யூரிக் அமிலம் யாருக்கு அதிகமாகும்?

*மதுப்பழக்கம் இருப்பவர்களுக்கு யூரிக் அமிலம் அதிகமாகும்.

*மாட்டிறைச்சி,பன்றி இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு யூரிக் அமிலம் அதிகமாகும்.

*பண்ணை கோழி இறைச்சி,அதிகம் இனிப்பு சாப்பிடுபவர்களுக்கு யூரிக் அமிலம் அதிகமாகும்.

*பதப்படுத்தபட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது யூரிக் அமிலம் அதிகமாகும்.

அறிகுறிகள்:

மூட்டு எலும்பு வீக்கம்

சிறுநீரக நோய்

இருதய நோய்

உயர் ரத்த அழுத்தம்

நீரிழிவு

யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் இயற்கை வழிமுறைகள்:

1)சுரைக்காய்

ஒரு கப் சுரைக்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸ் செய்து குடித்து வந்தால் யூரிக் அமிலம் கட்டுப்படும்.

2)நட்ஸ்

தினமும் பாதாம்,வால்நட்டை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் யூரிக் அமிலம் கட்டுப்படும்.

3)செம்பருத்தி தேநீர்

ஒரு தேக்கரண்டி செம்பருத்தி பொடியை ஒரு கிளாஸ் நீரில் சேர்த்து கொதிக்க வைத்து தேன் சேர்த்து குடித்தால் யூரிக் அமில பிரச்சனை ஏற்படாது.

4)இஞ்சி தேநீர்

ஒரு கிளாஸ் நீரில் சிறிய துண்டு இஞ்சியை இடித்து போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளவும்.பிறகு அதை வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்தால் யூரிக் அமிலம் கட்டுப்படும்.

5)பால் + வாழைப்பழம்

சூடான பாலில் வாழைப்பத் துண்டுகளை சேர்த்து பருகி வந்தால் யூரிக் அமில பிரச்சனை ஏற்படாது.

6)ஆப்பிள் சீடர் வினிகர்

தினமும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குடித்து வந்தால் யூரிக் அமிலம் கட்டுப்படும்.