அமெரிக்கா: அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ கடுமையாக பரவி வரும் நிலையில் கனடா தீயணைப்பு விமானம் தீயை அனைத்து வருகிறது.
அமெரிக்காவில் இதுவரை இல்லாத பேரழிவு இந்த காட்டுத்தீ தான் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கடுமையான காட்டுத்தீ பரவி கொண்டிருகின்றன. இதில் பல தீயணைப்பு குழுக்கள் களமிறங்கி கடுமையாக போராடி வருகிறது.
50 மாகாணங்களைக் கொண்ட அமெரிக்க சமீபத்தில் கனடா வை தன்னுடைய 51 மாகாணமாக இணைய வேண்டும் என கூறியிருந்தது. அதில் டிரம்ப் கூறுகையில் கனடா அமெரிக்காவுடன் இணைத்தால் வரிகள் ஏதும் இருக்காது. மேலும் கனடா ஒரு பாதுகாப்பான நாடாக மாறும் என டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். தற்போது வரும் 20 ம் தேதி டொனல்ட் டிரம்ப் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த இணைவு குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில் அமெரிக்காவுடன் கனடா இணைவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று. அதில் துளியளவும் விருப்பம் இல்லை. வர்த்தக ரீதியாக இரு நாடுகளும் மிகப்பெரிய நாடுகள் தான் என்று பதிலடி கொடுத்தார். இந்நிலையில் கனடா அரசின் விமானம் அமெரிக்காவில் தீயை அனைத்து வருகிறது.
இதை ஜஸ்டின் ட்ரூடோ தன்னுடைய x தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் neighbours helping neighbors என பதிவிட்டுள்ளார். மேலும் கலிபோர்னியா பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைப்பதற்கு கனடா முயற்சித்து வருகிறது. இதில் 250 விமானங்கள் அணைக்க முயற்சியை மேற்கொண்டு வருகிறது. கனடா உதவியதை குறிப்பிட்டு கனடா மற்றும் அமெரிக்க இணைய உள்ளது என அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றன.