Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரணாப் முகர்ஜியின் இறப்புக்கு அமெரிக்கா இரங்கல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் குடியரசுத்தலைவர் பிராணாப் முகர்ஜியின் மறைவுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேம்.
இந்திய வாரலாற்றின் ஆண்டுகளில் என்றென்றும் நினைவு கூறப்படும் சிறந்த தலைவரின் இழப்பால் வருந்தியுள்ள இந்திய மக்களுடன் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exit mobile version