Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிகவும் கொடூரமானவர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் சகோதரி மேரி ஆன் தமது சகோதரர் டொனால்டு டிரம்ப் கொடூரமானவர், கொள்கையற்றவர் என பேசியுள்ள ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் பொறுப்பான ஒரு பதவியில் இருந்து கொண்டு நாளுக்கு நாள் டிரம்ப் பொய் பேசுவதாகவும், அவருக்கு கொள்கை என்பதே இல்லை எனவும் மேரி ஆன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

உலகின் கொடூரமான மனிதனை என் குடும்பம் எப்படி உருவாக்கியது என டிரம்பை குறிவைத்து மேரி டிரம்ப் புத்தகம் ஒன்றையும் கடந்த மாதம் வெளியிட்டிருந்தார். அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டு அவரது ரத்த தொடர்பு கொண்ட சகோதரியிடமிருந்து வந்துள்ளது. ஆனால், ஜனாதிபதி டிரம்போ அல்லது வெள்ளை மாளிகையோ இந்த பதிவு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version