Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உக்ரைனின் அண்டை நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்! ரஷியா மீது போர் தொடுக்க திட்டமா?

உக்ரைனின் அண்டை நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்! ரஷியா மீது போர் தொடுக்க திட்டமா?

உக்ரைன் மீதான ரஷியா நடத்தி வரும் தாக்குதல் இன்று 26-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தொடுத்துள்ள போரின் காரணமாக இதுவரை உக்ரைனிய மக்கள் 34 லட்சம் பேர் உக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக கைவிட உலக நாடுகள் பல வலியுறுத்தியும், சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேட்காமல் ரஷிய படைகள் உக்ரைன் மீது தாங்கள் நடத்தி வரும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. தனது தீவிர தாக்குதலால் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளது ரஷிய ராணுவம்.

தற்போது உக்ரைனின் தலைநகரான கீவ், கார்கீவ் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது ரஷிய ராணுவம். போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்த போதிலும் அதில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

ரஷியாவின் தொடர் தாக்குதல் காரணமாக உக்ரைனிய மக்கள் அண்டை நாடுகளில் சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக உக்ரைனின் அண்டை நாடான போலாந்து நாட்டில் லட்சக்கணக்கான உக்ரைனிய மக்கள் அகதிகளாக சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகிற வெள்ளிக்கிழமை போலாந்து நாட்டிற்கு செல்ல இருக்கிறார். அப்போது போலாந்து அதிபர் ஆண்ட்ரிஸ் டூடாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

Exit mobile version