Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியா வரும் டிரம்ப்: என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்து?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வரும் 24ஆம் தேதி வருகைதர இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டிரம்பின் இந்திய வருகையின்போது அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை பட்டியலில் மீண்டும் இடம்பெறுவது குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்த உள்ளது

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இந்த பயணத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்

குறிப்பாக இறக்குமதி பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்ததால் சமீபத்தில் அமெரிக்கா தமது வர்த்தக முன்னுரிமை பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை திரும்பப் பெறுவது குறித்து டிரம்ப் பயணத்தின்போது பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன் இந்தியாவுடனான வர்த்தக உடன்படிக்கைகளை உறுதிசெய்வதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது

Exit mobile version