அமெரிக்கா – கொரோனா தடுப்பூசி குறித்து ஜோ பைடனின் புதிய அறிவிப்பு!

0
138

தற்போது அனைத்து உலக நாடுகளும் கொரோனா வைரஸை எதிர்த்து தடுப்பூசி போடுவதில் அதி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து நாட்டு மக்களும் இந்த தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் அவர்கள் கூறியதாவது : “வருகின்ற ஜூலை மாதத்திற்குள் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்தை மக்கள் அனைவரும் கட்டாயம் போட்டிருக்க வேண்டும். அமெரிக்காவை சேர்ந்த 60 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான டோஸ்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்”.

அத்துடன் ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு தேவையான மற்றும் போதுமான அளவிற்கு டோஸ்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார் பிரதமர் ஜோ பைடன். மக்களின், கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தை தவிர்க்கும் வகையில் உரையாற்றியுள்ளார் ஜோ பைடன்.

மேலும் குழந்தைகள் அனைவரும் விரைவில் பள்ளிக்கு செல்வார்கள் என்று உறுதி அளித்துள்ளார். அதாவது மாணவர்கள் பள்ளிக்கு சென்று பயில்வதற்கு ஆர்வமாக இருப்பதை சுட்டிக்காட்டிய ஜோ பைடன் அடுத்த கிறித்துமஸ் தினத்திற்குள் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் தெரிவித்துள்ளார்.