Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல் முறையாக சந்திக்கும் நேரெதிர் துருவங்கள்! உலக நாடுகளிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

17 வது ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று இந்தோனேசியாவின் பாலி நகரத்தில் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த மாநாடு வரும் 16ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நாட்டில் 20 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கு பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த g20 மாநாடு ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் கூடுவதாக தெரிகிறது. இதில் பங்குபெறும் உலக நாடுகளின் தலைவர்கள் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.

இந்த ஜி-20 மாநாட்டில் சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம் உள்ளிட்ட 3 தலைப்புகளின் கீழ் 3 அமர்வுகள் இடம் பெறுவதாக சொல்லப்படுகிறது. இதன் கீழ் உலக நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜி-20 நாடுகள் குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவிற்கு பயணமாகிறார்.

இந்த ஜி 20 நாடுகளின் குழுவில் இடம் பெற்றுள்ள அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் இந்தோனேசியாவில் நடைபெற உள்ள இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றுக் கொள்ள உள்ளனர். அமெரிக்காவின் சார்பாக சீனாவின் சார்பாக சீனாவின் அதிபர் ஜி. ஜின் பிங்கும் பங்கேற்க உள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று 2 வருடங்கள் நிறைவடைய உள்ளனர். அதேபோல சமீபத்தில் தான் சீன அதிபராக 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டார் ஜி ஜின்பிங் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜோபைடன் பதவி ஏற்ற 2 வருடங்களில் முதல் முறையாக ஜி.ஜின் பிங்கை அவர் சந்திக்க உள்ளார்.

தைவான் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே அண்மையில் மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான போரில் இரு நாடுகளும் வெவ்வேறு நாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. உலகின் இருவரும் வல்லரசு நாடுகளாக திகழும் சீனாவும், அமெரிக்காவும் ஒருவர் மீது ஒருவர் பொருளாதார தடைகளை விதித்து இருக்கின்றன.

ரஷ்யா, உக்ரைன் போர் சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் நோய் தொற்று உள்ளிட்டவை காரணமாக, பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நிலையும் மோசமடைந்து கொண்டே செல்கிறது. பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தவாறு இருக்கிறது. அமெரிக்காவிற்கு இந்த விவகாரம் தலைவலியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் இரு நாடுகளின் பொருளாதார நிலை பருவநிலை மாற்றம் சர்வதேச விவகாரம் குறித்து ஜோ பைடனும், ஜி.ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரெதிர் துருவங்கள் முதல் முறையாக சந்திப்பது உலக அளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version