சுற்றுச்சூழல் மாசு,சமையல் செய்யும் பொழுது வரும் வாசனை,தூசி போன்றவற்றால் சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த சைன்ஸ் பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டும் எந்த பயனும் இல்லையா? அப்போ கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை மட்டும் ஒருமுறை செய்து பார்க்கவும்.நிச்சயம் சைன்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
1)கருப்பு மிளகு – 10
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:
சைனஸ் பிரச்சனை குணமாக கருப்பு மிளகு பெரிதும் உதவுகிறது.இந்த கரு மிளகு 10 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்கு சைன்ஸ் பாதிப்பு இருந்தால் 5 கரு மிளகு மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து எடுத்து வைத்துள்ள கரு மிளகை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.மிளகு கருகிடாமல் பார்த்துக் கொள்ளவும்.
இந்த மிளகை ஆறவிட்டு உரல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள கரு மிளகு பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் சைனஸ் பாதிப்பு நீங்கும்.கருமிளகு நீர் பருக பிடிக்கவில்லை என்றால் மிளகுத் தூளை சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.நிச்சயம் ஒரு வாரத்தில் சைன்ஸ் பாதிப்பிற்கு தீர்வு கிடைக்கும்.