மார்புச் சளி நீங்க ஏலக்காய் மற்றும் நெய்யை இப்படி பயன்படுத்துங்க! 

0
292
Use cardamom and ghee like this to get rid of chest cold!
மார்புச் சளி நீங்க ஏலக்காய் மற்றும் நெய்யை இப்படி பயன்படுத்துங்க!!
நம்முடைய மார்பில் இருக்கும் சளியை வெளியேற்ற ஏலக்காய் மற்றும் நெய்யை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம் வீட்டு சமையலில் சமைக்கும் உணவுப் பொருட்களின் வாசனையை அதிகரிக்கும் சுவையை அதிகரிக்கவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகின்றது. அதே போலத் தான் நெய்யும். இந்த இரண்டிலும் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது.
ஏலக்காயில் புரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்துக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருக்கின்றது. அதே போல நெய்யில் ஆக்சிஜனேற்ற பண்புகள், நல்ல கொழுப்புகள், விட்டமின்கள் மற்றும் பல சத்துக்கள் இருக்கின்றது. இந்த நெய் மற்றும் ஏலக்காயை சேர்த்து பயன்படுத்தும் பொழுது நம்முடைய மார்பில் கட்டிக் கொண்டிருக்கும் சளி வெளியே வந்துவிடும்.
தேவையான பொருட்கள்…
* நெய்
* ஏலக்காய்
செய்முறை…
நான்கு அல்லது ஐந்து ஏலக்காயை எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதை மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பவுலில் அரைத்து வைத்துள்ள ஏலக்காய் பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் நெய் சிறிதளவு சேர்த்து கலந்து விட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் இதை அப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் மார்ப்புச் சளி நீங்கும்.