பாத வீக்கத்தை குணமாக்க “தேங்காய் எண்ணெய் + கற்பூரம்”.. இப்படி பயன்படுத்துங்கள்!
அதிக நேரம் வேலை செய்தல், உடல் பருமன், வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் பாதத்தில் வலி, வீக்கம் ஏற்படும். அதுமட்டும் இன்றி பாதத்தில் அடிபட்டாலும் வலி, வீக்கம் ஏற்படும்.
உடலில் தேவையற்ற கழிவுகள் அதிகம் சேர்ந்திருந்தால் பாத வீக்கம் வலி ஏற்படும்.. இதை குணமாக்க தேங்காய் எண்ணெயில் சில பொருட்களை சேர்த்து காய்ச்சி பாதங்களில் தடவவும்.
தேவையான பொருட்கள்:-
1)கற்பூரம்
2)தேங்காய் எண்ணெய்
3)மஞ்சள் தூள்
4)கல் உப்பு
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 200 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரம் ஒன்று எடுத்து தூளாக்கி அதில் சேர்க்கவும்.
அதனை தொடர்ந்து சிறிது கல் உப்பை சேர்த்து எண்ணையை கொதிக்க விடவும்.
அடுத்து அதில் 1/4 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் சேமித்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை….
பாதத்தில் வீக்கம், வலி உள்ள இடத்தில் இந்த எண்ணெயை தடவவும்.
ஒரு மணி நேரத்திற்கு பின்னர் பாதத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பாத வீக்கம் சில தினங்களில் சரியாகி விடும்.