பண்டிகை காலங்களில் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள ஆண்,பெண் அனைவரும் ஆசைக்கொள்வர்.உங்கள் முகம் இயற்கையாக ஜொலிக்க வீட்டில் இருக்கின்ற பொருட்களை பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
1)காபி பொடி
2)சோள மாவு
3)கற்றாழை ஜெல்
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.பிறகு தண்ணீர் சூடானதும் ஒரு தேக்கரண்டி காபி தூள் சேர்த்து குறைவான தீயில் கொதிக்கவிடவும்.
பிறகு இந்த பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி காபி நீரை சிறிது நேரம் ஆறவிடவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சோள மாவு சேர்த்து கலந்துவிடவும்.
பிறகு ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுக்கவும்.இதை நீரில் போட்டு இரண்டு முதல் மூன்று முறை அலசி சுத்தம் செய்யவும்.
இதை மிக்ஸி ஜாரில் போட்டு க்ரீம் பதத்திற்கு அரைக்கவும்.இந்த க்ரீமை சோள மாவு கலவையில் சேர்த்து நன்கு கலக்கி முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.
அரை மணி நேரம் வரை இந்த க்ரீமை முகத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் ஒரு பொலிவு கிடைக்கும்.இந்த கீரிமை நாளொன்றுக்கு ஒருமுறை அப்ளை செய்து வாஷ் பண்ணினால் ஒரே வாரத்தில் முகத்தில் மாற்றத்தை காண முடியும்.
தேவையான பொருட்கள்:
1)ரோஜா இதழ்
2)சந்தனக் கட்டை
3)பன்னீர்
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு கப் அளவு காய்ந்த ரோஜா இதழ்களை எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு சந்தன கட்டையை உரசி சிறிதளவு சந்தனத் தூள் எடுத்து கிண்ணத்தில் போடவும்.அதன் பிறகு அரைத்த ரோஜா இதழ் பொடியில் ஒரு தேக்கரண்டி அளவு அதில் கொட்டி இரண்டு தேக்கரண்டி பன்னீர் சேர்த்து க்ரீம் பதத்திற்கு கலக்கவும்.இதை முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்யவும்.
ஒரு மணி நேரம் வரை உலரவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவாகவாக காட்சியளிக்கும்.