Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அசுர வேகத்தில் தலைமுடி வளர.. ஆனியன் ஹேர் ஆயில் செய்து பயன்படுத்துங்கள்!!

use-onion-hair-oil-to-grow-hair-fast

use-onion-hair-oil-to-grow-hair-fast

தலை முடி உதிர்வு என்பது தரபோதைய சூழலில் பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.நம் அம்மா பாட்டி காலத்தில் தலைமுடியை பராமரிக்க அதிக அக்கறை செலுத்தப்பட்டது.சீகைக்காய்,அரப்பு,பூந்தி கொட்டை போன்ற பொருட்களை மட்டும் பயன்படுத்தியதால் தலைமுடி உதிர்வு பிரச்சனையை சந்திக்காமல் இருந்தனர்.

ஆனால் இக்காலத்தில் பெரியவர்களுக்கு மட்டுமின்றி சிறு குழநதைக்கும் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியமான முறையில் அதன் வளர்ச்சியை அதிகரிக்க ஆனியன் ஹேர் ஆயில் செய்து உபயோகியுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய வெங்காயம் – இரண்டு
2)தேங்காய் எண்ணெய் – ஒரு கப்
3)எசென்ஷியல் ஆயில் – மூன்று துளிகள்

எண்ணெய் தயாரிக்கும் முறை:-

*முதலில் இரண்டு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

*பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யவும்.

*பின்னர் அடுப்பில் வாணலி வைத்து ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.

*தேங்காய் எண்ணெய் சூடானதும் அரைத்த வெங்காயத்தை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.

*எண்ணெய் நிறம் மாறி வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.பிறகு இதை ஆறவைத்து ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.

*வெங்காய வாசனை விரும்பாதவர்கள் அதில் எசென்ஷியல் ஆயில் சிறிது கலந்து கொள்ளலாம்.

*இந்த எண்ணெயை தலை முடியின் மயிர்க்கால் பகுதியில் படும்படி தடவி மசாஜ் செய்து வந்தால் அடர்த்தியான முடி வளர்ச்சியை பெற முடியும்.

*அதேபோல் தேங்காய் எண்ணெயில் சின்ன வெங்காயம் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் அசுர வேகத்தில் முடி வளரும்.

*தேங்காய் எண்ணெயில் வெட்டி வேரை போட்டு நன்கு ஊறவைத்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

*கறிவேப்பிலை,வெந்தயம்,சின்ன வெங்காயத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து ஆறவைத்து வடித்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் நன்றாக முடி வளரும்.

Exit mobile version