Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எப்பேர்ப்பட்ட சளியும் மலத்தின் மூலம் வெளியேற வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

#image_title

எப்பேர்ப்பட்ட சளியும் மலத்தின் மூலம் வெளியேற வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

விண்வெளியில் கால் பதித்தது முதல் இப்பொழுது மனிதன் விண்வெளியில் கட்டிடமே கட்டி வாழ பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு இருக்கிறான் இருந்த போதும் நம் மனித இன சாபமாக இருப்பது இந்த சளி.

சளி தொந்தரவுக்கு மருத்துவ துறையில் எந்த ஒரு நிரந்தர தீர்வும் இன்றளவிலும் கண்டுபிடிக்க வில்லை ஆனால் தற்காலிக தீர்வாக நம் முன்னோர்கள் பின் பற்றிய இயற்கை வழிகள் பல அதில் ஒன்றை நாம் இந்த பதிவில் பார்க்களாம்.

கபச்சளி, நெஞ்சுச்சளி, வறட்டு இருமல் போன்றவற்றிற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சளியை கரைக்க எளிமையான முறையை இந்த பதிவில் காணலாம்.

பெரிய வெங்காயத்தை வெட்டி போட்டு சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த வெங்காயமானது சளியை கரைத்து வெளியேற்ற பயன்படுகிறது நான்கு அல்லது ஐந்து மிளகை எடுத்துக் கொள்ளவும் இந்த மிளகானது சளியின் போது ஏற்படும் தொண்டை கரகரப்பு போன்றவற்றை சரி செய்ய உதவும்.

அடுத்ததாக மஞ்சள் தூள் எடுத்துக்கொள்ள வேண்டும் மஞ்சள் தூளில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதால் மஞ்சள் பால் கூட சளி பிடித்தவர்கள் குடிக்கின்றார்கள் அடுத்ததாக ஒரு சப்போட்டா பழம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த சப்போட்டா பழங்கள் சளியை நீக்குவதற்காக வைட்டமின் சி சத்து நிறைந்த பழமாக கருதப்படுகிறது. ஒரு சிறிய பவுலில் சப்போட்டா பழத்தை விதை நீக்கி சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும்.

பின்னர் நான்கு ஐந்து மிளகை அதில் போட்டுக் கொள்ளவும். பின்பு ஒரு மணி நேரம் ஊற வைத்துள்ள வெங்காயச் சாற்றை மட்டும் அதில் சேர்த்துக் கொள்ளவும். பின்பு கால் சிட்டிகை அளவு மஞ்சள் தூளை அதில் தூவி கிளறவும்.

இந்த கலவையை உண்டு வர நாள்பட்ட சளி இருமல் தொண்டை கரகரப்பு ஆகியவை நீங்கி உடல் நலம் வெகு விரைவில் குணம்பெறும்.

Exit mobile version