60 வயதிலும் 20 வயது இளமை தோற்றம் பெற முகத்திற்கு இதை மட்டும் பயன்படுத்துங்கள்!
இன்றைய காலகட்டத்தில் இளம் பருவத்தில் முகச் சுருக்கம், முக வறட்சி, கரும்புள்ளிகள் ஏற்படுவது சாதாரண ஒன்றாகி விட்டது. இதனால் 30 வயதை கடப்பதற்கு முன்னரே முதுமை தோற்றம் ஏற்பட்டு விடுகிறது.
இந்த பாதிப்பை முற்றிலும் தவிர்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து முயற்சித்து வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)பாதாம் பாருப்பு
2)ஆளி விதை
3)வெந்தயம்
4)கஸ்தூரி மஞ்சள்
5)அரிசி கழுவிய தண்ணீர்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி ஆளி விதை மற்றும் ஐந்து பாதாம் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற விடவும்.
மறுநாள் காலையில் ஊறவைத்த அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரிசி கழுவிய நீர் சிறிதளவு ஊற்றி அரைத்து பேஸ்டாகவும்.
இந்த பேஸ்டை ஒரு கிண்ணத்தில் போட்டு 1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் போட்டு நன்கு கலக்கி கொள்ளவும்.
பிறகு அரிசி கழுவிய நீர் கொண்டு முகத்தை சுத்தப்படுத்தி கொள்ளவும். இதன் பின்னர் அரைத்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து ஐந்து நிமிடங்களுக்கு மஜாஜ் செய்யவும்.
பிறகு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவி சுத்தப்படுத்தவும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை காலை மற்றும் இரவு செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம், கருவளையம், கருப்புள்ளி, தேமல், மங்கு அனைத்தும் நீங்கி முகம் பொலிவாக இருக்கும்.