Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே நாளில் முகம் வெள்ளையாக தக்காளியுடன் இந்த 2 பொருட்களை பயன்படுத்துங்கள்!!

#image_title

ஒரே நாளில் முகம் வெள்ளையாக தக்காளியுடன் இந்த 2 பொருட்களை பயன்படுத்துங்கள்!!

பொதுவாக பெண்களுக்கு தங்கள் முகம் அழகாக, வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக ரசாயனம் கலந்த பொருட்களை முகத்திற்கு உபயோகின்றனர். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நம்மில் பெரும்பாலானோரிடம் இல்லை என்பது தான் நிதர்சனம். இப்படி அதிக பணம் குடுத்து ரசாயன பொருட்களை வாங்கி பயன்படுத்தி பக்க விளைவுகளை சந்திப்பதைவிட வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து ஆரோக்கியமான முறையில் முகத்தை வெள்ளையாக மாற்றலாம்.

தேவையான பொருட்கள்:-

*தக்காளி – பாதி

*சர்க்கரை – 1 தேக்கரண்டி

*கஸ்தூரி மஞ்சள் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு முழு தக்காளியை அரையாக நறுக்கி கொள்ள வேண்டும். அதில் கஸ்தூரி மஞ்சள் மற்றும் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

இவற்றை பயன்படுத்துவதற்கு முன்னால் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு இந்த மஞ்சள் + சர்க்கரை சேர்த்த தக்காளியை முகத்தில் நன்கு தேய்க்க வேண்டும்.

குறைந்தது 15 நிமிடங்கள் அவற்றை முகத்தில் வைத்திருக்க வேண்டும். பிறகு முகத்தை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகம் அழகாகவும், வெள்ளையாகும் மாறும்.

Exit mobile version