இந்த 5 இலைகளை இப்படி யூஸ் பண்ணுங்க.. அரை மணி நேரத்தில் தலைபாரம் சைனஸ் நீக்கிவிடும்!!
உங்களில் பலர் தலைபாரம்,தலைவலி,சைன்ஸ்,தலையில் நீர்கோர்த்தல் போன்ற பாதிப்புகளால் அவதியடைந்து வருவீர்கள்.இது போன்ற பாதிப்புகளால் தலையை அசைக்க முடியாமல் போகும்.கடுமையான தலைவலியால் தூக்கமின்மை ஏற்படும்.இந்த பாதிப்புகள் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை முயற்சி செய்து வாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)நுணா இலை
2)கற்பூரவல்லி
3)வேப்பிலை
4)இஞ்சி
5)துளசி இலை
6)நொச்சி இலை
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் நெருப்பு துண்டுகளை போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு நுணா இலை,இரண்டு கற்பூரவல்லி இலை,நான்கு வேப்பிலை,ஒரு துண்டு இடித்த இஞ்சி,பதினைந்து துளசி இலை மற்றும் இரண்டு நொச்சி இலையை போட்டு நீங்கள் படுக்கும் அறையில் ஆவி மூட்டவும்.
10 நிமிடங்களுக்கு இவ்வாறு செய்த பின்னர் அந்த பாத்திரத்தை வெளியில் வைத்து நெருப்பு துண்டுகளை அணைத்து விடவும்.
பிறகு அந்த அறைக்கு சென்று 2 மணி நேரங்கள் படுத்துறங்கினால் தலையில் நீர்கோர்த்தல்,சைன்ஸ்,தலைபாரம் உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கி விடும்.
மற்றொரு தீர்வு
1)கற்பூரவள்ளி இலை
2)கட்டி கற்பூரம்
3)துளசி இலை
4)நொச்சி இலை
5)வேப்பிலை
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 500 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் இரண்டு கற்பூரவல்லி இலை,கால் கைப்பிடி அளவு துளசி இலை,நான்கு நொச்சி இலை,ஒரு கொத்து வேப்பிலை போட்டு 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
பிறகு ஒரு கட்டி கற்பூரத்தை அதில் போட்டு கலக்கி ஆவி பிடிக்கவும்.இவ்வாறு செய்தால் தலைபாரம்,நீர்கோர்த்தல்,சைன்ஸ் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.