Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீபாவளி திருநாளில் இந்த நான்கு பொருட்களை மற்றும் கண்டிப்பாக பயன்படுத்துங்கள்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

தீபாவளி திருநாளில் இந்த நான்கு பொருட்களை மற்றும் கண்டிப்பாக பயன்படுத்துங்கள்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

தீபாவளி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகையில் நாம் சில விஷயங்கள் செய்தால் அவை பண வரவை அதிகரிக்க செய்யும். தீபாவளி என்பது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இல்லையெனில் அதற்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்யலாம்.

 

இந்த பரிகாரத்தை பிரம்ம முகூர்த்தமான விடியற்காலை  4 மணி முதல் காலை 6 மணிக்குள் மட்டுமே செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் கல் உப்பு, ஒன்பது  ஒரு ரூபாய் நாணயம் அல்லது ஒன்பது  5 ரூபாய் நாணயம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு புதிய வெள்ளி ,தங்கம் ,பித்தளை ,செம்பு என்ற ஏதேனும் ஒரு தட்டில் கல் உப்பை கொட்டி அதில் நாணயங்களை வைக்க வேண்டும். அதன் பிறகு வாசனை தரக்கூடிய ஏதேனும் ஒரு மலரை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் கிழக்கு திசை நோக்கி இரண்டு அகல் விளக்கை ஏற்ற வேண்டும்.

அதன் பிறகு அந்தத் தட்டில் கல் உப்பை கொட்டி அதன் மேல் 9 நாணயங்களையும் வரிசையாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு நாணயத்தின் மேலும் ஒரு மலர் வைக்க வேண்டும். இவ்வாறு வைத்த உடன் நீங்கள் உங்களின் வேண்டுதலை நினைத்து வேண்டிக் கொள்ளலாம்.

அதன் பிறகு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து தட்டில் இருக்கும் நாணயத்தை எடுத்து நாம் பணம் வைத்திருக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு தட்டில் வைத்துள்ள கல் உப்பை நாம் அன்றாடம் பயன்படுத்தும் கல்லுப்புடன் கலந்து கொள்ளலாம். வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி அன்று இவ்வாறு செய்து வர பணவரவு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

Exit mobile version