பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது வாந்தி,உடல் சோர்வு,தலைவலி,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை சந்திப்பது இயல்பான ஒன்று.ஆனால் இந்த பாதிப்புகள் அதிகமானால் பல தொந்தரவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.குறிப்பாக வாந்தி எடுப்பது தொடர்ந்தால் உடல் சோர்வடைந்துவிடும்.எனவே வாந்தியை இயற்கை முறையில் கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்து பார்க்கவும்.
தீர்வு ஒன்று
1)இஞ்சி
2)வெங்காயம்
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு ஒரு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.இவை இரண்டையும் தண்ணீர் போட்டு அலசி சுத்தப்படுத்தவும்.
பிறகு மிக்ஸி ஜாரில் இந்த இரண்டு பொருட்களையும் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் வாந்தி உடனே நிற்கும்.
தீர்வு இரண்டு
1)நெல்லிக்காய்
2)தேன்
ஒரு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் கர்ப்ப கால வாந்தி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
தீர்வு மூன்று
1)வெற்றிலை காம்பு
வாந்தி உணர்வு ஏற்படும் போது ஒரு வெற்றிலை காம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.
தீர்வு நான்கு
1)இலவங்கம்
2)தண்ணீர்
இரண்டு இலவங்கத்தை ஒரு கிளாஸ் நீரில் போட்டு ஊறவைத்து குடித்து வந்தால் வாந்தி பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
தீர்வு ஐந்து
1)வேப்பம் பூ
சிறிதளவு வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி ரசத்தில் கலந்து சாப்பிட்டால் வாந்தி வருவது தடுக்கப்படும்.
தீர்வு ஆறு
1)துளசி
2)கற்கண்டு
சிறிதளவு துளசியை த்ண்ணீரில் சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதில் சிறிதளவு கற்கண்டு தூளை இடித்து கலந்து சாப்பிட்டால் வாந்தி உணர்வு கட்டுப்படும்.
தீர்வு ஏழு
1)எலுமிச்சை சாறு
2)சீரகம்
ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சையின் சாற்றை சீரகத்தில் பிழிந்து சிறிது நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் வாந்தி உணர்வு கட்டுப்படும்.