இன்று முடி உதிர்தல் சாதாரண விஷயமாக மாறிவிட்டது.தலைமுடியை பராமரிக்க நேரமில்லாததால் முடி உதிர்தல்,பொடுகு தொல்லை,முடி வெடிப்பு,இளநரை போன்ற பிரச்சனையை அனைவரும் சந்தித்து வருகின்றனர்.
நீங்கள் கீழே சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தீர்கள் என்றால் தலைமுடி உதிர்வு ஏற்படுவது முழுமையாக கட்டுப்படும்.
தீர்வு 01:
1)கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3)வைட்டமின் ஈ கேப்சியூல் – ஒன்று
*முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
*பிறகு கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்தெடுக்க வேண்டும்.கற்றாழை மடலின் தோலை சீவிவிட்டு அதனுள் இருக்கின்ற ஜெல்லை மட்டும் ஒரு ஸ்பூன் கொண்டு தனியாக பிரித்தெடுக்கவும்.
*இந்த கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அலசி எடுக்கவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
*பிறகு ஊறவைத்த வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு வெந்தயம் ஊறிய தண்ணீர் சிறிதளவு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.இந்த பேஸ்டை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலக்கவும்.
*பிறகு ஒரு கேப்சியூலை கற்றாழை வெந்தயக் கலவையில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து தலை முழுவதும் அப்ளை செய்யவும்.இந்த பேஸ்ட் முடிகளின் வேர்காள் பகுதியில் அப்ளை செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகமாகும்.
தீர்வு 02:
1)தயிர் – ஒரு தேக்கரண்டி
2)ஆலிவ் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
*முதலில் பசுந் தயிர் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.
*பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
*இந்த பேக்கை தலை முழுவதும் அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசவும்.
*இப்படி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.