Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தி அதிகரிக்க இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துங்கள்!!

#image_title

பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தி அதிகரிக்க இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துங்கள்!!

நம்மில் பலர் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை ஏற்படத் தொடங்கும்.

பொடுகு பிரச்சனை ஏற்படக் காரணங்கள்:-

*வறண்ட சருமம்

*மன அழுத்தம்

*முறையற்ற உணவு பழக்கம்

*முறையற்ற தூக்கம்

*காலநிலை மாற்றம்

இந்த பொடுகு பிரச்சனையை அதிக மருத்துவம் கொண்ட பச்சை பயறு மற்றும் தயிரை வைத்து ஒரே மாதத்தில் சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*பச்சை பயறு

*தயிர்

ஹேர் பேக் தயாரிக்கும் முறை:-

பச்சை பயறை காய வைத்து அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பவுல் எடுத்து அதில் பொடி செய்து வைத்துள்ள பச்சை பயறு மாவு சேர்க்க வேண்டும்.

அடுத்து அதில் தயிர் 4 தேக்கரண்டி கலந்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அதனை முடியின் வேர் பகுதியில் படுமாறு தடவ வேண்டும். அரை மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பு பயன்படுத்தி முடியை நன்கு அலச வேண்டும்.

இந்த ரெமிடியை வாரத்திற்கு 2 முறை தலைக்கு உபயோகித்து வந்தோம் என்றால் தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனை நீங்கி முடி அடர்த்தியாக வளரும்.

Exit mobile version