இந்த ஹோம் மேட் ரெமிடியை பயன்படுத்தினால் சொறி சிரங்கை 24 மணி நேரத்தில் சரி செய்துவிடலாம்!!

0
163
Use this home made remedy to get rid of scabies in 24 hours!!

இந்த ஹோம் மேட் ரெமிடியை பயன்படுத்தினால் சொறி சிரங்கை 24 மணி நேரத்தில் சரி செய்துவிடலாம்!!

தோலில் ஏற்படக் கூடிய அசௌகரிய பாதிப்புகள் சொறி,சிரங்கு.கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகள் தோலில் நுழைந்து சொறி,சிரங்கை ஏற்படுத்துகிறது.இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.சொறி,சிரங்கு பாதிப்பு உள்ளவர்களுடன் தோல் தொடர்பு கொண்டால் தங்களுக்கும் பரவிவிடும்.

இந்த பாதிப்பு ஏற்பட்டால் இரவு நேரங்களில் அதிகப்படியான தோல் தடிப்பு,அரிப்பு,நமைச்சல்,வலி,பிப்பு போன்றவை ஏற்படக் கூடும்.

சொறி,சிரங்கு யாருக்கு ஏற்படும்?

1)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள்

2)வயதானவர்கள்

3)HIV நோய் இருபவர்கள்

4)புற்றுநோயாளிகள்

சொறி சிரங்கை குணமாக்கும் வீட்டு வைத்தியங்கள்:

*வேப்பிலை
*கிராம்பு எண்ணெய்

ஒரு கப் வேப்பிலையை நீர் விட்டு அரைத்து ஒரு கிண்ணத்தில் அதன் சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 25 மில்லி கிராம்பு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு வேப்பிலை சாற்றை அதில் ஊற்றி கொதிக்கவிடவும்.

இந்த எண்ணெயை ஆறவிட்டு சொறி,சிரங்கு மீது தடவி வந்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

*வேப்பஎண்ணெய்
*மஞ்சள் தூள்

ஒரு தேக்கரண்டி வேப்பெண்ணையில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து லேசாக சூடுபடுத்தி சொறி,சிரங்கு மீது அப்ளை செய்து வந்தால் அங்குள்ள நுண் கிருமிகள் எளிதில் அழிந்துவிடும்.

*தேங்காய் எண்ணெய்
*வெற்றிலை

ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.பிறகு ஒரு வெற்றலையை பொடியாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சவும்.பிறகு இந்த எண்ணெயை ஆறவிட்டு சொறி,சிரங்கு ஏற்பட்ட இடத்தில் பூசி வந்தால் அவை சில தினங்களில் குணமாகிவிடும்.

சொறி,சிரங்கு போன்ற தோல் நோய்களால் அவதியுற்று வருபவர்கள் மீன்,கருவாடு,கத்திரிக்காய்,தேங்காய் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் தோல் அரிப்பு ஏற்படத் தொடங்கும்.