7 விதமான நோயை போக்கும்! தினமும் சமையலில் சேர்த்து கொள்ளுங்கள்!

0
244
#image_title

 

பூண்டு என்று சொன்னாலே நமது மனதிற்கு முதலில் வருவது இதயத்திற்கு மிகவும் பாதுகாப்பு அளிக்கும். மேலும் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு சத்துக்களை நீக்கும்,என்றுதான் இந்த வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணங்களைப் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

 

1. வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அல்லில் சல்பைடு என்னும் பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

குறிப்பாக இரைப்பை புற்றுநோயை தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

 

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. தினமும் பூண்டை சாப்பிடும் உணவில் சேர்த்து உட்கொண்டு வருவதால் வைரஸ் மற்றும் பக்டீரியா தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கும், மொத்தத்தில் நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

3. இதய நோய்களை தடுக்கும்

 

மாரடைப்பு மற்றும் இதர இதய நோய் பிரச்னைகளில் இருந்து பூண்டு பாதுகாக்கிறது.இதில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

 

4.  கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் பூண்டுக்கு உண்டு.

 

5. தொண்டை பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது. பூண்டில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பொருட்கள், தொண்டை பிரச்னைகளிலிருந்து விடுவிக்கிறது.தொண்டை எரிச்சல்களை குணப்படுத்துவதுடன், சுவாச பாதை தொற்றுகளின் தீவிரத்தையும் குறைக்கிறது.

 

6. மேலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

 

7. பல்வலியை போக்கும் நன்மையை கொண்டது இந்த பூண்டு.பூண்டில் உள்ள பக்டீரியா எதிர்ப்பி மற்றும் வலி நிவாரணி குணங்கள் பல்வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.