முடி புதர் போன்று வளர இதை 30 தினங்களுக்கு மட்டும் தலைக்கு உபயோகியுங்கள்..!

0
312
#image_title

முடி புதர் போன்று வளர இதை 30 தினங்களுக்கு மட்டும் தலைக்கு உபயோகியுங்கள்..!

தலை முடியை இயற்கை முறையில் வளர வைக்க எளிய வழிகள்…

பாசி பயறு
தயிர்
வெந்தயம்
முட்டை

மூன்று தேக்கரண்டி பாசிப்பயறு மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் வறுக்கவும்.

இதை ஆறவிட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து அதில் அரைத்த பாசிப்பயறு மற்றும் வெந்தயப் பொடி 3 ஸ்பூன் அளவு சேர்த்து 1 ஸ்பூன் தயிர் மற்றும் 1 முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த பேஸ்டை தலைக்கு அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு சீகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

ஆளிவிதை
கற்றாழை ஜெல்
வெந்தயம்

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் ஆளிவிதை மற்றும் 1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து இளநீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு ஒரு கற்றாழை மடலில் இருந்து கற்றாழை ஜெல்லை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த ஆளி விதை, வெந்தயம் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்டை தலைக்கு அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு சீகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

பச்சரிசி ஊறவைத்த தண்ணீர்
பிரியாணி இலை
கொய்யா இலை

ஒரு கப் பச்சரிசி ஊற வைத்த தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 2 பிரியாணி இலை மற்றும் 2 கொய்யா இலை போட்டு கொதிக்க விடவும்.

இந்த நீரை ஆறவிட்டு அதில் உள்ள பிரியாணி இலை மற்றும் கொய்யா இலையை மட்டும் நீக்கி விடவும்.

பிறகு அரிசி ஊறவைத்த தண்ணீரை பிரியாணி இலை + கொய்யா இலை கொதிக்க வைத்த தண்ணீரில் ஊற்றி சிறிது நேரம் ஊற விடவும். இந்த நீரை தலைக்கு அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு பின்னர் தலைக்கு குளித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.