இன்றைய காலகட்டத்தில் அதிகப்படியான ஆண்கள் தாம்பத்திய வாழ்க்கையில் விறைப்புத்தன்மை பாதிப்பால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.இன்று பெரும்பாலான ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை மோசமாக இருக்கிறது.இதனால் செக்ஸ் வாழ்க்கை அவர்களுக்கும் அவர்களது துணைக்கும் மகிழ்ச்சியற்றதாக மாறிவிடுகிறது.
ஆண்மை குறைபாடு,விறைப்புத்தன்மை ஏற்படக் காரணம்:
1)உடல் பருமன்
2)மது மற்றும் புகைப்பழக்கம்
3)நீரிழவு நோய்
4)மருந்து
5)மோசமான உணவுப்பழக்கம்
6)மன அழுத்தம்
7)உடல் உபாதைகள்
ஆண்குறியில் போதுமான அளவு இரத்த ஓட்டம் இல்லையென்றால் விறைப்புத்தன்மையின்மை பிரச்சனை ஏற்படும்.
அறிகுறிகள்:
*பாலியல் ஈடுபாட்டில் நாட்டம் குறைதல்
*திடீர் எடை இழப்பு
*உடலுறவில் சோர்வு
*ஆண்குறி வலி மற்றும் வீக்கம்
ஆண்குறியில் காயங்கள்,புரோஸ்டேட் கேன்சர்,பேக் போர்ன் காயங்கள்,ஹார்மோன் ஏற்றத்தாழ்வு,நீரிழிவு நோய்,உயர் இரத்த அழுத்தம்,கவலை போன்ற காரணங்கள் விறைப்புத்தன்மையை குறைக்கும்.
அதேபோல் பெருந்தமனி தடிப்பு,அதிக கொழுப்பு,உடல் பருமன் போன்ற காரணங்களாலும் விறைப்புத்தன்மையில் குறைபாடு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்மை குறைபாடு மற்றும் விறைப்புத்தன்மைக்கு தீர்வு:
1.பூண்டு பற்களை இடித்து பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
2.மிளகை இடித்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு சரியாகும்.
3.பூசணி விதைகளை வறுத்து பொடியாக்கி பசும் பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை குறைபாடு,விறைப்புத்தன்மை குறைபாடு உள்ளிட்டவை சரியாகும்.
4.சியா விதைகளை ஊறவைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் விறைப்புத் தன்மை குறைபாடு சரியாகும்.
5.தர்பூசணி,வாழைப்பழம்,தக்காளி உள்ளிட்ட பழங்களை அடிக்கடி எடுத்துக் கொண்டால் ஆண்மை அதிகரிக்கும்.