Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலையில் உள்ள வெள்ளை முடி சில மணி நேரத்தில் கருமையாக மாற இதை பயன்படுத்துங்கள்!!

#image_title

தலையில் உள்ள வெள்ளை முடி சில மணி நேரத்தில் கருமையாக மாற இதை பயன்படுத்துங்கள்!!

நம் தலைமுடி இளம் வயதில் நரைக்க ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் காரணங்களாக சொல்லப்பட்டாலும் தலை முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

இளநரை ஏற்படக் காரணங்கள்:-

*தலை முடியை முறையாக பராமரிக்க தவறுதல்

*முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்

*மன அழுத்தம்

*இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தால்

*முறையற்ற தூக்கம்

தேவையான பொருட்கள்:-

*மருதாணி இலை – 1 கைப்பிடி அளவு

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி ‘

*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

*நெல்லி முல்லி பொடி – சிறிதளவு

*தயிர் – தேவையான அளவு

செய்முறை..

1 கைப்பிடி அளவு மருதாணி இலையை சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும். பின்னர் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், சிறிதளவு நெல்லி முல்லி பொடி மற்றும் தேவையான அளவு தயிர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இந்த பேஸ்டை ஒரு மூடி போட்டு இரவு முழுவதும் ஊற விடவும். பின்னர் மறுநாள் காலையில் இதை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வரை ஊற விட்டு பின்னர் தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை என்று தொடர்ந்து உயோகித்து வந்தோம் என்றால் தலையில் உள்ள வெள்ளை முடி முழுவதும் கருமையாக மாறும்.

Exit mobile version