ஆண் மற்றும் பெண்கள் தங்கள் புருவ அடர்த்தியை அதிகரிக்க விருப்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்புகளில் ஒன்றை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
தீர்வு 01:-
1)சின்ன வெங்காயம் – இரண்டு
2)தேங்காய் எண்ணெய் – அரை தேக்கரண்டி
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் சுத்தம் செய்து வைக்க வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்த வெங்காய சாறில் அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.இந்த கலவையை புருவங்கள் மீது அப்ளை செய்து வந்தால் அவற்றின் அடர்த்தி அதிகரிக்கும்.
தீர்வு 02:-
1)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
2)தேங்காய் எண்ணெய் – அரை தேக்கரண்டி
ஒரு கிண்ணத்தில் அரை தேக்கரண்டி அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு சிறிய கற்றாழை துண்டில் இருந்து ஜெல்லை மட்டும் பிரித்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கற்றாழை பேஸ்டை தேங்காய் எண்ணெயில் போட்டு கலந்து புருவங்கள் மீது அப்ளை செய்து வந்தால் மெல்லிய புருவங்கள் அடர்த்தியாக வளரும்.
தீர்வு -3:-
1)வைட்டமின் E மாத்திரை – ஒன்று
2)தேங்காய் எண்ணெய் – அரை தேக்கரண்டி
ஒரு கிண்ணத்தை எடுத்து அரை தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வைட்டமின் E மாத்திரையை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து புருவங்கள் மீது அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் அடர்த்தியாக வளரும்.
தீர்வு 03:-
1)வெந்தயம் – கால் தேக்கரண்டி
2)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3)கற்றாழை ஜெல் – அரை தேக்கரண்டி
முதலில் விளக்கெண்ணெயை கிண்ணம் ஒன்றில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து கால் தேக்கரண்டி வெந்தயத்தை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வெந்தயத் தூளை விளக்கெண்ணெயில் கொட்டி மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து அதில் அரை தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை பருவங்கள் மீது தடவி வந்தால் அடர்த்தியாக வளரும்.