இல்லத்தரசிகளுக்கு பயன் தரும் அசத்தலான வீட்டு குறிப்புகள்!!

0
122

*மூக்குப் பொடியை தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்தால் எறும்பு தொல்லை இருக்காது.

*வீடு துடைக்கும் முன் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, பின் துடைத்தாள் ஈக்கள் தொல்லை இருக்காது.

*சின்ன வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமலும் முளை வராமலும் இருக்கும்.

*வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

*கடலை எண்ணெயில் சிறிது புளியை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு எண்ணெய் கெடாமல் இருக்கும்.

*வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிதளவு உப்பை சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

*சிறிது வெது வெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை சற்று நேரம் ஊற வைத்து, பின் துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.

*சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் வெங்காயத்தை நனைத்து, பின் நறுக்கினால் கண்கள் எரியாது.

*கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

*சப்பாத்தியை சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட நேரத்திற்கு சூடாக இருக்கும்.