பயன்படாத பிளாஸ்டிக்கை பயன்படும் பொருளாக வீட்டிலே மாற்றலாம்! எப்படி தெரியுமா?

0
131

பயன்படாத பிளாஸ்டிக்கை பயன்படும் பொருளாக வீட்டிலே மாற்றலாம்! எப்படி தெரியுமா?

அன்றாட வாழ்வில் அதிக அளவு பொருட்கள் பிளாஸ்டிக் ஆக தான் உள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் உபயோகித்து விட்டு தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் அதனை மறுசுழற்சி செய்து நம் அன்றாட தேவைகளுக்கு உபயோகித்துக் கொள்ளலாம். அந்த வகையில் நாம் அதிகமாக பயன்படுத்துவது பிளாஸ்டிக் பாட்டில்கள் தான். அந்த பாட்டில்களை உபயோகித்து விட்டு நாம் தேவையில்லை என தூக்கி எறிந்து விடுகிறோம்.

அந்த பாட்டிலின் மூடியை வைத்து பல பொருள்களை நாம் வீட்டில் இருந்தே உருவாக்கலாம்.பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உள்ள அழுக்குகள் போக்க சுடுநீரில் போட்டு ஒன்று அல்லது இரண்டு நிமிடம் கொதிக்க விட வேண்டும். அதனை எடுத்து அந்த முடிகளை ஒரு நான் ஸ்டிக் தவாவில் போட்டு உருக வைக்க வேண்டும். அவ்வாறு உருக்கியதும் நமக்கு தேவையான வடிவத்தினை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பிளாஸ்டிக் அந்த வடிவத்தில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.பின்பு இந்த உருகிய பிளாஸ்டிக்கை ஊற்ற வேண்டும்.சிறிது நேரத்தில் நீங்கள் உபயோகம் செய்யும் வகையில் உங்களுக்கு தேவையான பிளாஸ்டிக் பொருள் உருவாகிவிடும்.இனி பிளாஸ்டிக் பாட்டில்களை தூக்கி எறியாமல் இது போல் நம் வீட்டிற்கு உபயோகம் படும் வகையில் நாமே பொருள்களை பயன்படுத்திக் கொள்ளலாம்