தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு! நள்ளிரவிலிருந்து அமல்!

0
115

தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு! நள்ளிரவிலிருந்து அமல்!

தமிழகத்தில் நள்ளிரவு முதல் 21 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 565 சுங்க சாவடிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமே மொத்தம் 48 சுங்க சாவடிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இதில் 20 இடங்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்வதாக அறவிக்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம், திருப்பராயத்துறை, பொன்னம்பலப்பட்டி, தஞ்சை மாவட்டம் வாழவந்தான்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி,‌ வீரசோழபுரம்‌, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை,விருதுநகர் மாவட்டம் புதூர் பாண்டியாபுரம்,‌ மதுரை மாவட்டம் எலியார்பத்தி, நாமக்கல் மாவட்டம் ராசம்பாளையம், விஜயமங்கலம், சேலம் மாவட்டம் ஓமலூர், மேட்டுப்பட்டி, நத்தக்கரை, வைகுந்தம், திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு, கரூர் மாவட்டம் வேலஞ்செட்டியூர், மணவாசி, தருமபுரி மாவட்டம் பாளையம் ஆகிய 21 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.

இந்த 21 சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு ஏற்ப ரூ. 5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது.