Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெங்காயத்தை இப்படி தேய்த்தால் ஒரு முடி கொட்டாது! முடி வேகமாக வளரும்!

முடி உதிர்வு என்பது பெண்களுக்கு ஒரு மன அழுத்தம் ஆகவே மாறிவிடுகிறது. முடி உதிர்வை சரி செய்து முடி கொட்டாமல் பாதுகாத்து வேகமாக வளர செய்யும் அற்புதமான முறையை பார்ப்போம்!

தேவையான பொருட்கள்:

1. பெரிய வெங்காயம் -1

2. விட்டமின் E- Oil – 1 ஸ்பூன்

3. பஞ்சு

செய்முறை:

1. முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து சிறிது சிறிதாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

2. இப்பொழுது வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

3. தண்ணீர் சேர்க்க கூடாது.

4. இப்பொழுது அதை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

5. அதில் விட்டமின் E-Oil 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

6. இப்பொழுது பஞ்சை எடுத்து வெங்காய நீரில் நனைத்து தலையில் வேர் கால்களில் படும் படி தடவி விடவும்.

7. ஒரு அரை மணி நேரம் ஊறவைத்து அதன் பின் தலைக்கு குளித்து விடவும்.

 

இப்படி வாரம் 2 முறை செய்து வர முடி உதிர்வு நின்று விடும். மேலும் முடி நன்றாக வளரும்.

Exit mobile version