Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உஷார் ஆன்லைன் போலி திருமண தகவல்! ரூ.8 லட்சம் மோசடி!

உஷார் ஆன்லைன் போலி திருமண தகவல்! ரூ.8 லட்சம் மோசடி!

திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் கீதா. இவருக்கு வயது 25. தற்போது இவர் தனது பெயரை சாப்ட்வேர் என்ஜினியராக மாற்றிக் கொண்டார். இவர் திருச்சியில் உள்ள தில்லைநகர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார்.

இந்நிலையில் திருமண வயது வந்ததால் ஆன்லைன் திருமண மையத்தின் மூலம் மாப்பிள்ளை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். தற்போது ப்ரொபைலில் பெங்களூர் முகவரியில் உள்ள ஒரு இளைஞரை பார்த்தால். இவர் இளைஞரை பார்த்தவுடன் திருமண ஆசை எட்டியது. பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டனர்.

நாளடைவில் இருவரும் நன்றாக பழகியதன்  காரணமாக சாட்டிங் செய்யும் அளவிற்கு சென்றுள்ளனர். சில நாட்கள் கழித்து அந்த வாலிபன் தனது சொந்த ஊர் பெங்களூர் என்றும் தற்போது லண்டனில் வசித்து வருவதாக கூறியுள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து தமிழ்நாட்டில் செட்டில் ஆகலாம் என்று ஆசை பாசையாக கூறியுள்ளார்.

அந்த வாலிபன் தான் சம்பாதித்து வைத்திருந்த நகை மற்றும் வெளிநாட்டு கரன்சி ஆகியவை உன் பெயருக்கு பார்சல் அனுப்புகிறேன். அது இந்தியாவின் மதிப்பீட்டின்படி ரூ 2 கோடி அளவிற்கு இருக்கிறது. இதனை  நீ வாங்கிக்கொள். இரண்டு மாதங்களில் நான் இந்தியாவுக்கு திரும்பி வந்து விடுவேன் என்று கூறியுள்ளார். இவை அனைத்தும் கீதா முழுமையாக நம்பி விட்டார்.

அடுத்த சில தினங்களில் டெல்லி விமான நிலையில் இருந்து பேசுவதாக ஒரு பெண் கீதாவின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. லண்டனிலிருந்து உங்கள் பெயருக்கு ஒரு பார்சல் வந்ததுள்ளது. இந்த பார்சல் உங்களுக்கு வேண்டும் என்றால் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி சுங்கத் துறை அனுமதி ஆகியவை பெற வேண்டும்.

மேலும் இந்த பார்சலுக்கு வரி செலுத்த வேண்டும். வரி செலுத்தவில்லை என்றால் இந்த பார்சல் உங்களுக்கு கிடைக்காது என்று ஒவ்வொன்றாகச் சொல்லி ரூ.8 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். வெளிநாட்டு கரன்சி ரூ 2 கோடி நகை பார்சலில் இருக்கும் என்று எண்ணி உடனடியாக அந்தப் பெண் கூறிய வங்கி கணக்கில்  ரூ 8 லட்சம் பணத்தை அனுப்பினார்.

அதன்பிறகு அவர் அழைத்த செல்போனுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போனில் பேசிய அந்தப் பெண் கூறியபடி எந்தவித நகையும் வரவில்லை.மேலும் வெளிநாட்டுக் கரன்சியும்  வரவில்லை. ஏமாற்றத்தை உணர்ந்த கீதா உடனடியாக திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தால்.

இன்ஸ்பெக்டர் அன்புசெல்வம் உடனடியாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் கீதா அனுப்பிய பணம் கொல்கத்தாவில் உள்ள இந்திய கணக்கு வங்கில் இருப்பதாக தெரியவந்துள்ளது. நைஜீரியாவை சேர்ந்த வாலிபன் மேற்குவங்காளத்தில் தங்கியிருந்து திருச்சி பெண்ணை ஏமாற்றி உள்ளதாக தெரியவந்துள்ளது.

சைபர் கிரைம் போலீசார் பணத்தை யாரும் பார்சலில் அனுப்புவதில்லை எந்த பொருள் அனுப்பினாலும் அனுப்புவர் வரி செலுத்த வேண்டும் ஆகவே போலி மோசடி என்ற பேரில் நம்பி பணத்தை யாரும்  நம்பவேண்டாம் என்று கூறினார்கள்.

Exit mobile version